உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் கட்சியின் முதல் மாநாடு வெற்றி பெற ஆதவ் அர்ஜூனா வாழ்த்து | Aadhav arjuna

விஜய் கட்சியின் முதல் மாநாடு வெற்றி பெற ஆதவ் அர்ஜூனா வாழ்த்து | Aadhav arjuna

விஜய் கட்சியின் முதல் மாநாடு வெற்றி பெற ஆதவ் அர்ஜூனா வாழ்த்து | Aadhav arjuna | Deputy General Secretary | VCK | Vijay | TVK conference நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இன்று நடக்கிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பே கட்சி தொடங்கினாலும் 2026 சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என வெளிப்படையாக அறிவித்து அதை நோக்கி பயணித்து வருகிறார் விஜய். இதனால் இவரது கட்சியின் முதல் மாநில மாநாடு அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஜய் கட்சியின் மாநாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அதன் தலைவர் சகோதரர் விஜய் தலைமையில் இன்று நடக்கிறது. மாநாட்டு மேடையை சுற்றி அமைந்துள்ள முகப்புகளில் தமிழக அரசியலின் கொள்கை ஆசான் ஈ.வெ.ரா, இந்திய அரசியலின் அடையாளம் அம்பேத்கர், மக்கள் தலைவர் பெருந்தலைவர் காமராஜர், அடிமைத்தனத்தை எதிர்த்த வீர பெண் களப்போராளிகள் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களை வைத்துள்ளனர். இதன் மூலம் தமிழ் மக்களின் பொது மனநிலையையும், உறுதியான லட்சிய அரசியலையும் விஜய் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். தொடர்ந்து, தனது அரசியல் பயணத்தை இதன் வழி அமைத்து கொள்வதன் மூலம் கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், அவரது இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் விஜயை வாழ்த்தி வரவேற்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை