உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனைவி மீது சந்தேகம்: கணவன் செய்த காரியம் | wife dies husband arrested tenkasi tirunelveli

மனைவி மீது சந்தேகம்: கணவன் செய்த காரியம் | wife dies husband arrested tenkasi tirunelveli

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கருவந்தா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவரது மனைவி சிவனம்மாள் (35). 3 குழந்தைகள் உள்ளனர். சுரேஷ், சிவனம்மாள் இருவரும் கூலி வேலை செய்தனர். சிவனம்மாள் வீட்டிலேயே பீடியும் சுற்றி வந்தார். தினமும் குடித்துவிட்டு வீடு திரும்பும் சுரேஷ், மனைவியை அடித்து உதைப்பது வாடிக்கை. வழக்கம்போல நேற்று மாலை போதையில் வீட்டுக்குவந்த சுரேஷ், மனைவியிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதில் போதையில் இருந்த சுரேஷ் சமையறைக்கு ஓடிப்போய், அரிவாளை எடுத்து வந்தார். இதை கவனிக்காமல் பீடி சுற்றிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் சரமாரி வெட்டினார்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி