சுப்ரீம் கோர்ட் 51வது தலைமை நீதிபதிக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் | Sanjiv khanna | CJI | Supreme cour
சுப்ரீம் கோர்ட் 51வது தலைமை நீதிபதிக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் | Sanjiv khanna | CJI | Supreme court | Takes oath ceremony | சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாக 2022- டிசம்பரில் பதவியேற்ற டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்றார். முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்ய மத்திய சட்ட அமைச்சகம் சந்திரசூட்டை கேட்டுக்கொண்டது. அவர், நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தனது பொறுப்புக்கு பரிந்துரை செய்திருந்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்றார். டில்லி ராஷ்ட்ரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சஞ்சீவ் கண்ணா 2025 மே 13 வரை 6 மாத காலம் பதவியில் இருப்பார். 1960 மே 14ல் டில்லியில் பிறந்தவர் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. தந்தை தேவ்ராஜ் கண்ணா டில்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர். தாய் சரோஜ் கண்ணா, இந்தி பேராசிரியராக டில்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணி செய்தவர். 1980ல் டில்லி சட்ட பல்கலையில் சட்டம் பயின் சஞ்சீவ் கண்ணா, 1983ல் டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். நீண்ட காலம் வழக்கறிஞராக இருந்தவர், 2005ல் டில்லி ஐகோர்ட் நீதிபதியாகவும், 2019-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இருந்தார். தேர்தல் பத்திர நடைமுறையை ரத்து செய்த 5 நீதிபதி அமர்வில் சஞ்சீவ் கண்ணாவும் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் தான் இப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்த ஒரு கோர்ட்டிலும் சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கவில்லை. இதற்கு முன்பு ஒரு சில நீதிபதிகளே இப்படி வேறு எந்த கோர்ட்டிலும் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்காமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகி இருக்கின்றனர்.