19 ஆண்டுக்கு பிறகு டைசன் போட்ட குத்துச்சண்டை Mike Tyson| Heavy weight Champion | Boxing | defeate
19 ஆண்டுக்கு பிறகு டைசன் போட்ட குத்துச்சண்டை Mike Tyson| Heavy weight Champion | Boxing | defeated in texas | America | குத்துச்சண்டை போட்டியில் 2 முறை ஹெவி-வெயிட் சாம்பியன் பட்டம் வென்றவர் மைக் டைசன். அமெரிக்காவைச் சேர்ந்தவர். 58 வயதான இவர் இதுவரை 57 போட்டிகளில் பங்கேற்று 50 முறை வெற்றி பெற்றுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை நாக்-அவுட் முறையில் வீழ்த்தினார். கடைசியாக 2005ல் ஐரிஷ் நாட்டு வீரர் கெவின் மெக்பிரைடிடம் தோல்வி அடைந்தபின் குத்து சண்டைப் போட்டிகளில் இருந்து விலகினார். எதிர்த்து சண்டையிட்ட வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சைகளில் சிக்கினார்.. இதனால் அவர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். 19 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த குத்து சண்டை போட்டியில் பங்கேற்றார். யுடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய 27 வயதான ஜேக் பால் Jake Paul மைக் டைசனை எதிர்த்து களமிறங்கினார். இந்தப் போட்டியை காண 70 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர். டைசனின் வலிமையை காண உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆன் லைனிலும் காத்திருந்தனர். டைசன் களத்துக்குள் நுழையும்போது பெருத்த கரகோஷம் எழுந்தது. ஒரு சுற்றுக்கு 2 நிமிடங்கள் என்ற கணக்கில் மொத்தம் 8 சுற்றுகள் நடந்தன. 58 வயது நிரம்பிய டைசனை ஜேக் பால் எளிதாக வீழ்த்தினார். டைசனின் தோல்வி அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்தது. அவரரது தோல்வியை நடுவர் அறிவிக்கும் முன்பே பலர் அரங்கை விட்டு வெளியேறினர். 8 சுற்றுகளிலும் ஜேக் பால் மொத்தம் 278 குத்து விட்டார். அதில் 78 குத்துகள் டைசன் முகத்தில் விழுந்தது. 97 குத்துகளை மட்டுமே மைக் டைசனால் விட முடிந்தது. இதில் 18 குத்து மட்டுமே ஜேக் பால் முகத்தில் விழுந்தது. மைக் டைசன் குத்துச்சண்டையின் அடையாளம். அவருடன் சண்டையிட்டது பெருமை என ஜேக் பால் தெரிவித்தார். வெற்றி பெற்ற ஜேக் பாலுக்கு இந்திய ரூபாய் மதிப்பு படி 338 கோடி ரூபாய் வழங்கப்படும்; மைக் டைசனுக்கு 169 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.