ஆரம்பிக்கும் போதே இப்படியா? வெள்ளக்காடான காட்சிகள் | Chennai Rain | IMD Chennai
ஆரம்பிக்கும் போதே இப்படியா? வெள்ளக்காடான காட்சிகள் | Chennai Rain | IMD Chennai வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்போது தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய துவங்கி விட்டது. சென்னையில் திங்களன்று இரவு முதலே ஒரு சில இடங்களில் கனமழை ஆரம்பமானது. வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளான கோவளம், முட்டுக்காடு, கானத்தூர் ரெட்டி குப்பம், கேளம்பாக்கம், நாவலூரில் கனமழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் பெருங்களத்தூர், சேலையூர், முடிச்சூர், வண்டலூரில் காலையில் கனமழை கொட்டியது. சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் ரோட்டில் கனமழையால் டூவீலர்களின் டயர் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் தேங்கியது. அதில் சாக்கடை நீரும் கலந்தது. மக்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் திணறினர்.