உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் புதிய யுக்தி | Aravind Kejriwal | Aam Aadmi | Delhi | BJP

டில்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் புதிய யுக்தி | Aravind Kejriwal | Aam Aadmi | Delhi | BJP

ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி ஒருங்கினைப்பாளர் கெஜ்ரிவால் சொல்லிவிட்டார். மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு, 20 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார். இதில், 18 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்காமல் புதுமுகங்களை அறிவித்துள்ளார். துணை முதல்வராக இருந்து, மதுபான ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிறை சென்ற மணீஷ் சிசோடியாவின் தொகுதியும் மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர் கெஜ்ரிவால். 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி, 70ல் 62 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை