மோடி, அமித்ஷாவிடம் கவர்னர் ரவி முன் வைத்த விஷயங்கள் | PM Modi | Amit Shah | Governor Ravi
மோடி, அமித்ஷாவிடம் கவர்னர் ரவி முன் வைத்த விஷயங்கள் | PM Modi | Amit Shah | Governor Ravi பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ரவி நேற்று நேரில் சந்தித்து பேசினார். 1 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது சட்டம் ஒழுங்கு உட்பட தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம், கவர்னர் விளக்கியதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு, லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடந்தது. வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டாலும், தமிழக நிலவரங்கள் குறித்து பிரதமரிடம் விரிவாக விளக்கியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கொலைகள், பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் கவர்னர் ரவி பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், கவர்னர் ரவி சந்தித்து பேசினார். அப்போது தேசிய பாதுகாப்பு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.