4 நாடுகளை மிரட்டிய பயங்கர நிலநடுக்கம் | India Earthquake video | Tibet earthquake | earthquake today
4 நாடுகளை மிரட்டிய பயங்கர நிலநடுக்கம் | India Earthquake video | Tibet earthquake | earthquake today திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் இந்தியா, நேபாளம், பூடான் வரை பூமியை அதிர செய்தது. சரியாக, நேபாளம் எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் வந்தது. இதில் 5 நிலநடுக்கம் 3 முதல் 4 ரிக்டரில் பதிவானது. ஆனால் காலை 6:35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தது. ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இதனால் திபத்தில் வீடுகள் குலுங்கி சரிந்து விழுந்தன. மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கி மரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்தனர். 55 பேர் இறந்ததாகவும் 68 பேர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இறப்பு, காயம் விகிதம் இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 7.1 ரிக்டரில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தான் இந்தியா, நேபாளம், பூடானையும் உலுக்கியது. இந்தியாவை பொறுத்த வரை, டில்லி, பீகார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. வீடுகள் குலுங்கியதாலும் பொருட்கள் அதிர்ந்ததாலும் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர வைத்தன.