உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் டீ குடிக்க போன ஐஐடி மாணவிக்கு சோகம் | IIT Girl | Chennai IIT

சென்னையில் டீ குடிக்க போன ஐஐடி மாணவிக்கு சோகம் | IIT Girl | Chennai IIT

சென்னையில் டீ குடிக்க போன ஐஐடி மாணவிக்கு சோகம் | IIT Girl | Chennai IIT சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் அத்துமீறல் நடந்தது தமிழகத்தை உலுக்கியது. ஞானசேகரன் என்பவனை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இப்போது சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் சீண்டல் நடந்துள்ளது. ஐஐடி ஹாஸ்டலில் தங்கிபடிக்கும் மாணவி கல்லூரி வளாகத்துக்கு வெளியே உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீ ராம் என்கிற ஊழியர் மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது நண்பர்களிடம் கூறினார். ஸ்ரீ ராமை வளைத்து பிடித்த மாணவியின் நண்பர்கள் போலீசில் ஒப்படைத்தனர். பாலியல் தொல்லை சம்பவம் குறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் ஐஐடி வளாகத்தில் நடக்கவில்லை. கல்வி நிறுவனத்துக்கு வெளியே மாணவி டீ குடிக்க போன போது நடந்துள்ளது. கைதான நபருக்கும் ஐஐடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் வெளியே உள்ள பேக்கரியில் பணியாற்றி உள்ளார். மாணவி ஐஐடி வளாகத்திற்கு வெளியே உள்ள பேக்கரிக்குச் சென்ற போது பாலியல் தொல்லை நிகழ்ந்துள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த நபரை மாணவியின் நண்பர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு அனைத்து வகையிலும் ஐஐடி நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மாணவர்கள் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாணவர்கள், குடியிருப்பவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ