போஸ்டர் ஒட்டியது யார்? விசாரிக்கிறது போலீஸ் | DMK | MP Thanga Tamilselvan | MLA Maharajan
போஸ்டர் ஒட்டியது யார்? விசாரிக்கிறது போலீஸ் | DMK | MP Thanga Tamilselvan | MLA Maharajan தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. வரவேற்பு பேனரில் எம்பி போட்டோ இல்லாததால் தேனி எம்பி தங்க தமிழ்செல்வனும், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜனும் மேடையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இன்று ஆண்டிப்பட்டியில் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பணியில் ஈடுபடும் தேனி எம்பியை ஒருமையில் பேசிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும். கட்சியினரை மதிக்காத அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. ஆண்டிப்பட்டி கிழக்கு, மேற்கு மற்றும் பேரூர் கழக உடன் பிறப்புகள் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர் ஒட்டியது யார்? திமுகவை சேர்ந்தவர்கள் தான் ஒட்டியதா என ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.