அமித் ஷா தாக்கல் செய்த மசோதவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு mk stalin| amit shah| parliament|
அமித் ஷா தாக்கல் செய்த
மசோதவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு
mk stalin| amit shah| parliament|
அரசியலமைப்பு 130வது பிரிவு திருத்த மசோதாவை பார்லிமென்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 30 நாட்கள் கவலில் வைக்கப்பட்டால், 31வது நாள் அவரது பதவியை நீக்கம் செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மசோதா சீர்திருத்தம் அல்ல; இது ஒரு கருப்பு நாள்; கொடும் சட்டம் என்று விமர்சித்து இருக்கிறார். அவரது அறிக்கை:
30 நாள் கைது; ஒரு முதல்வரை எந்த விசாரணை, கோர்ட் தண்டனை இல்லாமல் பதவி நீக்கம் செய்யலாம். பாஜ வைத்ததுதான் சட்டம்.
எதிர்கட்சிகள் குரலை ஒடுக்குதல், மாநிலங்களை நசுக்குதல்; இப்படித்தான் சர்வாதிகாரங்கள் தொடங்குகின்றன. ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் இந்த மசோதாவை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தியாவை சர்வாதிகாரமாக மாற்றும் இந்த முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட கேட்டுக்கொள்கிறேன்.
வாக்கு திருட்டு அம்பலமான பின், பாஜ அமைத்துள்ள ஆட்சியே கேள்விக்குள்ளாகி உள்ளது. தில்லுமுல்லு மூலம் மக்கள் தீர்ப்பை திருடிய பாஜ இப்போது, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த மசோதா கொண்டு வந்துள்ளது.
பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள எதிர்கட்சிகள் மீது, பாஜ பொய் வழக்குகளை போட்டு விசாரணை, தீர்ப்பு இல்லாமல் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றவே இது வழி செய்கிறது.
அரசியலமைப்புக்கு புறம்பான இந்த சட்டதிருத்த மசோதா கோர்ட்களால் நிச்சயம் ரத்து செய்யப்படும். ஒழுங்காக எங்களுடன் இருங்கள் இல்லையென்றால்... என்று பிராந்திய கட்சிகளை மிரட்டுவதற்கான தீய நோக்கமும் இதில் இருக்கிறது.
எதிராளிகளை பதவியில் இருந்து அகற்றி அதிகாரத்தை கைப்பற்றுவது சர்வாதிகாரியின் முதல் நடவடிக்கை. அதைத்தான் இந்த மசோதா செய்ய முயற்சிக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.