உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதியோர் இல்லங்கள் பின்னணி: வெளியான அதிர்ச்சி தகவல் | NGO | Retirement home Tamilnadu

முதியோர் இல்லங்கள் பின்னணி: வெளியான அதிர்ச்சி தகவல் | NGO | Retirement home Tamilnadu

தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான முதியோர் இல்லங்கள் இருந்தாலும் எல்லாமே தொண்டு நிறுவனங்கள் வசம் உள்ளது. கடைசி காலத்தில் ஆதரவின்றி தவிப்பவர்கள் தான் முதியோர் இல்லங்களை நாடி செல்கின்றனர். அதுவும் தனியார் வசம் இருப்பதால் வணிக நோக்கில் செயல்படுகின்றன. முதியவர்களை இலவசமாக பராமரிக்கும் தொண்டு நிறுவனங்கள் வெகு சொற்பமாகவே உள்ளன. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி, தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்பது விதி. ஆனால் தமிழக அரசு சார்பில் எந்த ஒரு முதியோர் இல்லமும் தொடங்கப்படவில்லை. முதியோர் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் அரசு நிதி, தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து தரப்படுகிறது. ஒரு முதியோருக்கு மாதம் ஒன்றுக்கு 1,200 ரூபாய் உணவு மானியமாக வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு முதியோர் இல்லத்துக்கு 40 பேருக்கு மட்டும் தான் இந்த நிதி ஒதுக்கப்படும்.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை