/ தினமலர் டிவி
/ பொது
/ நாம் தமிழர் கட்சியினர் பிரஸ்மீட்டில் மோதல், அடிதடி | Ntmk Members Fight | Tirupatthur
நாம் தமிழர் கட்சியினர் பிரஸ்மீட்டில் மோதல், அடிதடி | Ntmk Members Fight | Tirupatthur
திருப்பத்தூர் மாவட்டம், அம்பலூரை சேர்ந்தவர் தேவேந்திரன். 2017ல் இருந்து நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தேவேந்திரனுடன் 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், தேர்தலில் யாருடனும் கூட்டு வைக்காததால் தோல்வியை சந்தித்தாக கூறினர். அப்போது அங்குவந்த நாம் தமிழர் கட்சியினர் தேவேந்திரனிடம் வாக்குவாதம் செய்தனர். கட்சியின் வாணியம்பாடி தொகுதி பாசறை பொறுப்பாளர் நாகராஜ், சீமானை பற்றி பேசாதே என தேவேந்திரனை சரமாரியாக தாக்கினார். இதனால் செய்தியாளர் சந்திப்பு கலவரம் ஆனது.
நவ 07, 2024