ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 12 பேர் மரணம் Pakistans balochistan
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், பலூச் தேசிய தலைவர் சர்தார் அதாவுல்லா மெங்கல் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில்குவெட்டாவில் பேரணி நடந்தது. பேரணி முடிந்ததும் ஷாவானி ஸ்டேடியத்தின் பார்க்கிங் பகுதியில் இருந்து மக்கள் வெளியேறிக்கொண்டு இருந்தனர். அப்போது, ஒரு பயங்கரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினார். குண்டுகள் வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் குவெட்டாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலில் பலூச் தேசிய கட்சி தலைவர் சர்தார் அக்தர் மெங்கல் உயிர் தப்பினார். தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை. இதேபோல வடமேற்கு பாகிஸ்தானின் பன்னு நகரத்தில் ஒரு துணை ராணுவ தளம் மீதும் நேற்று ஒரு பயங்கரவாதி வெடிபொருள் நிரப்பிய வாகனத்துடன் சென்று ராணுவ தள சுவரில் மோதி தாக்குதல் நடத்தினார். அதை தொடர்ந்து பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவ வீரர்கள் துப்பாக்கியால சுட்டனர். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 6 பேரும், பயங்கரவாதிகள் ஆறு பேரும் என மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லைகளை ஒட்டியுள்ளதால், பல ஆண்டுகளாக இங்கு பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. #PakistansBalochistan #SuicideBombAttack #BalochistanNews #SecuritySituation #PakistanUpdates #BreakingNews #Terrorism #BalochistanTragedy #PakistaniNews #CrisisInBalochistan #NationalSecurity #TerrorismAwareness #MartyrsOfBalochistan #BalochistanPeace #ViolenceInPakistan #BombAttack #PakistanCrisis #SaferCommunities #AwarenessMatters