உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு மொழியை திணிப்பதும், எதிர்ப்பதும் ஒருமைப்பாட்டிற்கு உகந்ததல்ல | Pawan Kalyan | Deputy CM | Andhra

ஒரு மொழியை திணிப்பதும், எதிர்ப்பதும் ஒருமைப்பாட்டிற்கு உகந்ததல்ல | Pawan Kalyan | Deputy CM | Andhra

மும்மொழி கொள்கை குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், இந்தியாவுக்கு பல மொழி தேவை. தமிழக அரசியல்வாதிகள் தேவையின்றி ஹிந்தியை எதிர்க்கின்றனர். தமிழ் படங்கள் டப்பிங் செய்து ஹிந்தியில் வெளியிட மட்டும் அனுமதிக்கின்றனர் என கூறியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. எம்.பி கனிமொழி, செய்தி தொடர்பாளர் இளங்கோவன் ஆகியோர் பவன் கல்யாணை விமர்சித்தனர். பா.ஜவுடன் சேருவதற்கு முன் இந்தியை எதிர்த்ததாகவும், பா.ஜவுடன் சேர்ந்த பிறகு இந்திக்கு ஆதரவாக பேசுவதாகவும் திமுக தரப்பில் விமர்சனம் செய்கின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பவன் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை