/ தினமலர் டிவி
/ பொது
/ 58 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பில்லூர் அணை | Pillur Dam | Pillur | Bhavani River
58 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பில்லூர் அணை | Pillur Dam | Pillur | Bhavani River
கோவை மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ளது பில்லூர் அணை. 100 அடி கொள்ளவு கொண்ட இந்த அணை 1966ல் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பில்லூர் அணையின் நீர் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக கேரளாவின் அட்டப்பாடி, மன்னார்காடு, சைலன்ட் வேலி, நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது. பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு அமைக்கப்பட்டது இந்த பில்லூர் அணை. கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பில்லூர் அணை கட்டப்பட்டது முதல் இப்போது வரை தூர்வாரப்படவில்லை.
ஜூலை 12, 2024