5 ஆண்டு செயல் திட்டம் வெளியீடு | PM Modi | Modi Visit Poland
போலந்தில் மோடியின் சிக்சர் இந்தியாவுக்கு ஜாக்பாட் பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக போலந்து நாட்டிற்கு சென்றார். பிரதமர் மோடி, போலந்து பிரதமர் டொனால்டு டக்ஸ் சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் விவாதிக்கப்பட்டது. ஸ்டாடர்ஜிக் பார்ட்னர்ஷிப் எனப்படும் பலதுறைகளில் இணைந்து செயலாற்றுவது. ராணுவம், வர்த்தகம், வேளாண் தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் எனப்படும் மாசில்லா தொழில்நுட்பம், கட்டமைப்பு வசதிகள், மருந்து தயாரிப்பு, சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது என விவாதிக்கப்பட்டது. இதற்காக 2024 - 2028 வரையிலான ஐந்தாண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு, பருவநிலை மாறுபாடு, ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் என உலகளாவிய விவகாரங்களில் இணைந்து செயல்படுவது, மிகவும் முக்கியமாக 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் அடுத்தக்கட்ட முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.