திருச்சி கொலை சம்பவத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! Police arrest criminal | Tiruchy murder case
திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். வயது 25. திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை தாமரைச்செல்வன் வீட்டில் இருந்து பைக்கில் வேலைக்கு புறப்பட்டார். அவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பின் தொடர்ந்துள்ளது. அவர்கள் கொலை செய்யும் நோக்கில் பின்தொடர்வதை அறிந்த தாமரைச்செல்வன் தனது பைக்கை ரோட்டிலேயே போட்டுவிட்டு, பீமநகரில் உள்ள போலீஸ் குடியிருப்புக்குள் ஓடினார். போலீஸ் குடியிருப்பு ஏ பிளாக்கில் தில்லைநகர் எஸ்.எஸ்.ஐ. செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்து காப்பாற்றும்படி கேட்டுள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த ஆசாமிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் தாமரைச்செல்வனை வெட்டிச் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பினர். அலறல் சத்தம் கேட்டு போலீஸ் குடியிருப்பில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். செல்வராஜ் வீட்டு வாசலில் இருந்து ரத்தக்கரையோடு கொலையாளிகள் பைக்கில் தப்பி ஓடுவதை பார்த்துள்ளனர். அவர்களை துரத்திச் சென்றதில் இளமாறன் என்ற 19 வயது இளைஞன் மட்டும் பிடிபட்டான். மற்ற நால்வரும் அங்கிருந்து தப்பினர். நேற்று முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வந்திருந்ததால் நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் தங்கிருந்த சுற்றுலா மாளிகையில் இருந்து 2 கிமீ தூரத்தில் நடந்த கொடூர கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே பிடிபட்ட இளமாறனிடம் விசாரித்த போது முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரிய வந்தது. கொலையான தாமரைச்செல்வனுக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, தாமரைச்செல்வன் தனது நண்பர்கள் மத்தியில் சதீஷை அடித்து அவமானப்படுத்தினார்.