கடத்தலில் தூத்துக்குடி ரவுடிக்கு முக்கிய பங்கு! | Police Investigation | Chennai Police
25,000 முதல் 1 லட்சம் தான்! தமிழகத்தில் துப்பாக்கி புழக்கம் பீகார் கும்பல் சப்ளை தமிழகத்தில் கொலை, ஆள் கடத்தல் என கொடூர செயலில் ஈடுபடும் ஏ பிளஸ் ரவுடிகளிடம் ஏற்கனவே கள்ளத்துப்பாக்கிகள் உள்ளன. இப்போது சிறிய அளவில் வளர்ந்து வரும் ரவுடிகளிடமும் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. சில தினங்களுக்கு முன் தனிப்படை போலீசார் சென்னை அடுத்த சிட்லபாக்கத்தில் பதுங்கி இருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ராஜா, சத்தியசீலனை கைது செய்தனர். அவர்களிடம் நாட்டு துப்பாக்கிகள் ஐந்தும், 79 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணையில் தமிழகத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் கள்ளத்துப்பாக்கிகள் புழக்கம் அதிகமாக இருப்பது தெரியவந்தது.