உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தல் தோல்விக்காக நவ.20 மவுன விரதம் இருக்க போவதாக அறிவிப்பு! Prashant kishor | Bihar election

தேர்தல் தோல்விக்காக நவ.20 மவுன விரதம் இருக்க போவதாக அறிவிப்பு! Prashant kishor | Bihar election

திமுக போன்ற கட்சிகளுக்கு வியூகம் வகுத்து தந்து தேர்தல் வெற்றிக்கு உதவியவர் பிரசாந்த் கிஷோர். 48 வயதான அவர் தனது சொந்த மாநிலமான பீகாரில் கடந்த ஆண்டு ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்கினார். அதற்கு முன் 2 ஆண்டு மாநிலம் முழுவதும் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இம்மாதம் நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் அவரது ஜன் சுராஜ் கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பிரசாரத்தின் போது ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 25 தொகுதியில் வென்றால், அரசியலில் இருந்து விலகுவேன் என பிரசாந்த் கிஷோர் கூறினார். தேர்தல் முடிவில் என்டிஏ அமோகமாக வென்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளை கைப்பற்றியது. சபதம் போட்ட பிரசாந்த் கிஷோரின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பல இடங்களில் டெபாசிட்டை இழந்து, மொத்தமாக 3.44 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. 68 தொகுதிகளில் நோட்டாவை விடவும் குறைவான ஓட்டுகள் பெற்றது. இந்த படுதோல்விக்கு நானே 100 சதவீதம் பொறுப்பு ஏற்கிறேன் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை