சுனாமி கோட்ரஸ் டு டோல்கேட் மினி பஸ் வந்தாச்சு: மக்கள் மகிழ்ச்சி private mini bus |thiruvottiyur
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூர்சட்டசபை தொகுதியில் முருகப்பன் நகர், ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர், கருணாநிதி நகர், சார்லஸ் நகர், உள்ளிட்ட பகுதிகளில் பலஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் பஸ்சுக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதன்பிறகுதான் பஸ்சையே பார்க்க முடியும். இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக மினி பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்று, திருவொற்றியூரில் தனியார் மினி பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, இன்று திருவொற்றியூர் காட்டு பொன்னியம்மன் நகர் பகுதியில் தனியார் மினி பஸ் சேவை துவக்க விழா நடந்தது. சென்னை மாநகராட்சி 6வது வார்டு கவுன்சிலர் திரவியம் கொடியசைத்து மினி பஸ்களை துவக்கி வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார். பிறகு மினி பஸ்சை சிறிது தூரம் அவரே ஓட்டினார்.