உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிஜஜி வீட்டில் பல கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் | Massive seizure from Punjab cop caught taking

டிஜஜி வீட்டில் பல கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் | Massive seizure from Punjab cop caught taking

#PunjabDIG #HarcharanSinghBhullar #CBI #DIGArrest #BribeCaseonDIG பஞ்சாப்பில் ரோப்பர் சரக டிஜஜி ஆக இருப்பவர் ஹர்சரண் சிங் புல்லர் ஐபிஎஸ். பஞ்சாப்பின் முன்னாள் டிஜிபி மேஹல் சிங் புல்லரின் மகனான இவர், லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது உதவியாளர் கிருஷ்ணாவும் பிடிபட்டார். பதேஹார்க் சாஹிப் மாவட்டத்தை சேர்ந்த, பழைய இரும்பு வியாபாரி ஆகாஷ் பட்டா Akash Batta என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது புகாரில், பிரச்னை இல்லாமல் தொழில் செய்ய வேண்டுமானால் முதற்கட்டமாக 8 லட்சம் ரூபாய் தர வேண்டும்; அதன் பின் மாதம் தோறும் மாமூல் தர வேண்டும். இல்லாவிட்டால் வணிக நடவடிக்கை தொடர்பாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிக்கவைத்து விடுவேன் என்று டிஜஜி புல்லர் மிரட்டுவதாக கூறியுள்ளார்.

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை