அதிபர் புடினின் கழிவுகளை சுமக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் Putin |Poop Suitcase |Security Measures
ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் கடந்த 15ம்தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். அவரது பயணத்தில் ஒரு வித்தியாசமான பாதுகாப்பு நடைமுறையை பாதுகாப்பு அதிகாரிகள் கடைப்பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புடினின் உடல் கழிவுகளை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தனி சூட்கேஸில் சேகரித்து ரஷ்யாவுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. புடினின் சிறுநீர், மலக் கழிவுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பிரத்யேக பையில் சேகரித்து சூட்கேசில் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது புடினின் பாதுகாப்பில் நடக்கும் வழக்கமான ஒரு பணி என ரஷ்ய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புடினின் உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளிவருகின்றன. வெளிநாட்டு உளவு துறைகள் அவரின் உடல் கழிவுகளை பகுப்பாய்வு செய்து அவருக்கு என்ன பிரச்னை என்பதை கண்டுபிடித்துவிடக்கூடாது என அதிபர் புடின் அஞ்சுகிறார். அதனால்தான் இந்த சூட்கேஸ் ஏற்பாடு என ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2017ல் புடின் பிரான்ஸ் சென்றார். 2019ல் சவுதி அரேபியா சென்றார். அப்போதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. 72 வயதான புடினின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் தொடர்ந்து பல செய்திகள் பரவி விவாதிக்கப்படுகின்றன.