சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்! Quarry Accident | Sivaganga | NDRF
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டையில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு 400 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கினர். திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் மல்லாக்கோட்டையை சேர்ந்த ஆண்டிச்சாமி, கணேசன் மற்றும் ஒடிஸாவை சேர்ந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் மூவர் மீட்கப்பட்டு ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஆறுமுகம், முருகானந்தம் என்பவர்கள் ஆஸ்பிடல் செல்லும் வழியில் இறந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மதுரை ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், எஸ்பி ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிக்காக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 30 பேர் கொண்ட குழு விரைந்துள்ளது.