/ தினமலர் டிவி
/ பொது
/ மழை நின்றும் வடியாத வெள்ளம் ; மக்கள் வெளியே தஞ்சம் |Rain |Thoothukudi Rain | Thoothukudi Flood
மழை நின்றும் வடியாத வெள்ளம் ; மக்கள் வெளியே தஞ்சம் |Rain |Thoothukudi Rain | Thoothukudi Flood
தூத்துக்குடி மாவட்டம் முழுதும் மூன்று நாட்களாக கனமழை கொட்டியது. மாநகர பகுதியில் பல தாழ்வான பகுதிகள் நீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. இதில் கோரம்பள்ளத்தில் உள்ள கலெக்டர் ஆபிசும் தப்பவில்லை. நேற்று மாலை கலெக்டர் ஆபிஸ் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய நீர், பி.என்.டி காலனி, கதிர்வேல் நகர் போன்ற பகுதிகளிலும் வீடுகளை சூழ்ந்தது. நேற்று மாலை முதல் மழை முற்றிலும் நின்று விட்டாலும் இன்னும் நீர் வடிந்த பாடில்லை.
டிச 15, 2024