ராமநாதபுரம் கோயிலில் பக்தர் மண்டை உடைப்பு | Rameswaram | Bihar devotee attacked by temple worker
திட்டிய கோயில் ஊழியர் பொங்கி எழுந்த பீகார் பக்தர் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிகில் குமார் ஓஜா மற்றும் அவரது உறவினர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் சாமி கும்பிட வந்தனர். பொது தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்த அவர்களை, கோயில் பணியாளர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். தடுப்புகளை தாண்டி முதலில் செல்ல முயன்றதாக ஓஜாவின் உறவினர்களை திட்டினார். ஓஜாவிற்கு தமிழ் நன்கு தெரியும். தகாத வார்த்தையில் பேசிய கோயில் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்பினரும் சத்தம் போட்டு சண்டை போட்டதால், போலீசார் வந்தனர். போலீசார் முன்னிலையிலேயே, அங்கிருந்த வாக்கி டாக்கியை எடுத்து ஓஜாவின் பின் மற்றும் முன் மண்டையில் கோயில் பணியாளர் தாக்கினார். இதில் ஓஜாவின் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்தனர். அருகில் உள்ள அரசு ஆஸ்பிடலில் முதலுதவி சிகிச்சை பெற்ற ஓஜா, தன்னை தாக்கிய கோயில் பணியாளர் மீது போலீசில் புகார் அளித்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் மிக மோசமாக நடந்து கொள்வதாக ஓஜாவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.