சாலைகளை ஆக்கிரமித்த வித்தியாசமான பேனர்கள்! | CM Rangasamy | Birthday banner | Puducherry
மற்ற கட்சி தலைவர்களை போல் இல்லாமல் ரங்கசாமியை மட்டும் அவரது கட்சியினர் தங்கள் விருப்பம்போல் சித்தரித்து பேனர் வைப்பது தான். நாளை பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து கட்—அவுட்டுகள், பேனர்கள் நகர் மற்றும் கிராம பகுதி சாலைகளை ஆக்கிரமித்துள்ளன. இந்த முறை இந்துக்கள் வழிபடும் சிவன், வீர சிவாஜி, cowboy, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித்சர்மா, இந்தியன் தாத்தா, கங்குவார், படையப்பா, கல்கி, பட ஸ்டைலில் ரங்கசாமியை சித்தரித்து பேனர்களில் தெறிக்க விட்டுள்ளனர். வித்தியாசமாக உள்ள இந்த பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்தாலும், தடையை மீறி பல இடங்களில் விபத்து ஏற்படும் வகையில் பேனர்கள் வைக்கப்படுவது சர்ச்சையை கிளப்பி உள்ளது.