/ தினமலர் டிவி
/ பொது
/ சட்டசபையில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதல்வர் | CM Rangasamy | Assembly | Puducherry
சட்டசபையில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதல்வர் | CM Rangasamy | Assembly | Puducherry
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் ஜூலை 31ல் கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆகஸ்ட் 2ல் 2024 -25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் பேசினார். கவர்னர் உரை, கடந்த ஆண்டில் நிறைவேறிய திட்டங்கள், புதிய ஆண்டில் வரப்போகும் திட்டங்களை கோடிட்டு காட்டுவதாக இருந்தது. எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் பேசும்போது, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பேசினர். அதுதான் எம்எல்ஏக்கள், மக்களின் எண்ணமாகவும் உள்ளது.
ஆக 05, 2024