சட்டவிரோத மண் கடத்தல் புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல்
திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செம்மண் கொள்ளை பற்றி தமிழக விவசய சங்க மாவட்டதலைவர் சின்னதுரை புகார் அளித்தனர். மணப்பாறை அடுத்த பெரியப்பட்டியில் சட்ட விரோதமாக செம்மண் கடத்தலில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். புறம்போக்கு இடத்தில் செம்மண் குன்றுகளை கபளீகரம் செய்து அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். திமுக ஒன்றிய செயலாளர் ஆரோக்யசாமி உள்ளிட்டோர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், கடத்தல் பற்றி புகார் அளித்ததால் கொலை மிரட்டல் வருவதாகவும் சின்னதுரை தெரிவித்துள்ளார்.
பிப் 17, 2025