உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உக்ரைன் விஸ்வரூபத்துக்கு 2 முக்கிய காரணம் | Russia vs Ukraine | Ukraine drone attack | US vs N.korea

உக்ரைன் விஸ்வரூபத்துக்கு 2 முக்கிய காரணம் | Russia vs Ukraine | Ukraine drone attack | US vs N.korea

உலகையே பரபரபக்க வைத்திருக்கிறது ரஷ்யா-உக்ரைன் போரின் திடீர் எழுச்சி. உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி இரண்டரை ஆண்டுகளை தாண்டி விட்டது. முதலில் இரு நாடுகளும் தீவிரமாக மோதின. தினமும் கொத்து கொத்தாக மரணங்கள் நேர்ந்தன. பின்னர் படிப்படியாக போரின் தீவிரம் குறைந்தது. இறப்புகளும் பெரிய அளவில் குறைந்தன. இப்போது திடீரென பல மாதங்கள் பிறகு ரஷ்யா, உக்ரைன் போர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இரண்டரை ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் வெறித்தனமான தாக்குதலை நடத்தி இருக்கிறது. பதிலுக்கு ரஷ்யாவும் உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்தது. மீண்டும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அப்படி என்ன நடந்தது? தீடீர் மோதலின் பின்னணியில் இருப்பது என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். பல மாதங்கள் அமைதியாக இருந்த உக்ரைன் 10ம் தேதி இரவில் திடீரென விஸ்வரூபம் எடுத்தது. உக்ரைனில் இருந்து ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமான ட்ரோன்கள் ரஷ்யாவுக்குள் புகுந்தன. அவற்றில் 36 ட்ரோன்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்குள் புகுந்து குண்டு மழை பொழிந்தன. மற்ற ட்ரோன்கள் உக்ரைனின் கிழக்கு எல்லையையொட்டி அமைந்திருக்கும் ரஷ்யாவின் ராணுவ முகாம்களை குறிவைத்தன. குறிப்பாக உக்ரைனின் குர்ஷ்க் பகுதியை ஒட்டி இருக்கும் ரஷ்ய ராணுவ முகாம்களில் உக்ரைன் ட்ரோன்கள் சரமாரியாக குண்டு வீசின. உக்ரைனின் திடீர் தாக்குதலால் ரஷ்யாவின் பல பகுதிகளில் குண்டு சத்தம் விண்ணை பிளந்தது. 3 விமான நிலையங்களில் உடனடியாக சேவையை நிறுத்தியது ரஷ்யா. உக்ரைன் ட்ரோன்களை குறி வைத்து ரஷ்யா சுட்டு வீழ்த்த துவங்கியது. மாஸ்கோவில் குண்டு வீசிய 34 ட்ரோன்களையும், பிற பகுதிகளில் 50 ட்ரோன்களையு் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவித்தது. இருப்பினும் இந்த துல்லிய தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தை பந்தாடியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோக்களை உக்ரைன் ராணுவம் வெளியிட்டது.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை