உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சங்கர் அட்மிட் ஆனதால் பொதுமக்கள் வெளியேற்றம் | savukku shankar admitted to hospital

சங்கர் அட்மிட் ஆனதால் பொதுமக்கள் வெளியேற்றம் | savukku shankar admitted to hospital

சிறைக்கு செல்லும் வழியில் நெஞ்சை பிடித்த சவுக்கு சங்கர்! ஆத்தூரில் அவசர சிகிச்சை பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் கைது செய்தனர். இதுபோல நீலகிரி போலீசாரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் ஊட்டி கோர்ட்டில் சங்கரை ஆஜர்படுத்திய போலீசார், கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அதன் பின் அவரை சென்னையில் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். சேலம் வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தபடி குறுகினார். உடனே, அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு வயிறு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு இருப்பதாக கூறிய டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இசிஜி எடுக்கப்பட்டது. டிரிப்ஸ் இறக்கப்பட்டது.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி