உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கையில் குளுகோஸ் ஊசியுடன் கோர்ட்டுக்கு வந்த செந்தில்! senthil balaji| ED

கையில் குளுகோஸ் ஊசியுடன் கோர்ட்டுக்கு வந்த செந்தில்! senthil balaji| ED

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைதானார். இந்த வழக்கில் இருந்த விடுவிக்க கோரி, சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் செந்தில் முறையிட்டார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரினார். இந்த வழக்கை நீதிபதி அல்லி நேற்று விசாரித்தார். குற்றச்சாட்டு பதிவு இன்று நடக்கும் என்றும், செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் செந்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். கையில் குளுகோஸ் ஏற்றுவதற்காக பொறுத்தப்பட்ட ஊசியுடன் செந்தில் அழைத்து வரப்பட்டார்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !