செய்தி சுருக்கம் | 01 PM | 22-05-2025 | Short News Round Up | Dinamalar
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று திறந்து வைத்தார்.
மே 22, 2025