டில்லி எய்ம்சில் அட்மிட் யெச்சூரிக்கு என்னாச்சு? Sitaram yechury| CPM General Secretary | Delhi Aims
சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம் செயற்கை சுவாசத்தில் சிகிச்சை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி. வயது 72. நிமோனியா காய்ச்சல் காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19ல் யெச்சூரி அட்மிட் செய்யப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மிக தீவிரமான நுரையீரல் தொற்றுக்குரிய சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக உடல் நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து செயற்கை சுவாச கருவியுடன் பல்துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சென்னையில் பிறந்து டில்லியில் படித்து வளர்ந்த சீதாராம் யெச்சூரி டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மாணவர் போராட்டங்களின் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்ட யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.