உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வஸ்திர மரியாதை! Srirangam Ranganathar Temple |

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வஸ்திர மரியாதை! Srirangam Ranganathar Temple |

3ம் நூற்றாண்டில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நம்பெருமாள் சிலகாலம் திருப்பதி கோயிலில் இருந்தார். இதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று, திருப்பதி கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வஸ்திர மரியாதை செய்யப்படுகிறது. அதன்படி திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயார், நம்பெருமாள், ராமானுஜருக்கு பட்டு வஸ்திரங்கள், மாலை மற்றும் மங்களப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் ஷியாமல் ராவ் தலைமையில் வஸ்திரங்களை எடுத்து வந்து ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக வஸ்திரங்களை கோயில் யானை மீது வைத்து உட்பிரகாரங்களில் வலம் வந்தனர். பின்னர் வஸ்திரங்கள் நம்பெருமாளுக்கும், தாயாருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை