/ தினமலர் டிவி
/ பொது
/ வாழ்நாள் தடை கோரும் மனுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு | Convicted politicians | Life
வாழ்நாள் தடை கோரும் மனுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு | Convicted politicians | Life
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வலியுறுத்தி வக்கீல் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நாடு முழுதும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இந்த மனுவை எதிர்த்து புதனன்று மத்திய அரசு பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ் நாள் முழுதும் தடை விதிக்க வேண்டும் என்பது கடுமையானது. 6 ஆண்டுகள் தடையே போதுமானது. வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி பார்லிமென்டின் அதிகார வரம்பில் வருகிறது.
பிப் 26, 2025