உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு Tamilnadu DGP| Supreme court

பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு Tamilnadu DGP| Supreme court

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த 31ம் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமித்தது. அவரும் பதவியேற்று பணிகளை கவனித்து வருகிறார். சீனியாரிட்டி அடிப்படையில் வெங்கட்ராமன் 9வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னதாக 8 ஐபிஎஸ்கள் இருக்கும்போது, பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பணியில் இருக்கும் டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, அடுத்து தகுதியான புதிய டிஜிபி பெயர்களை யுபிஎஸ்சிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்; தற்காலிக நியமனங்கள் கூடாது என்று 2018ல் பிரகாஷ் சிங் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பை தமிழக அரசு மீறி இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

செப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி