கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்! Supreme Court |
#SupremeCourt #TamilNadugovernment #SIT #kidneytheftcase #DMK #BJP #Highcourt நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிக பணம் தருவதாக கூறி விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி புரோக்கர்கள் கிட்னி திருட்டில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவின்பேரில், புரோக்கர் ஆனந்தன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தமிழக அரசின் சுகாதாரத்திட்ட இயக்குநர் வினித் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. அதில், திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கிட்னி தான முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணை குழு அளித்த அறிக்கையின் பேரில், இரு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு மருத்துவமனைகளும் ஆளுங்கட்சியினருக்கு சொந்தமானவை. பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையை மணச்சநல்லுார் தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவனின் குடும்பம் நிர்வகிக்கிறது. திருச்சி மருத்துவமனை திமுக பிரமுகருக்கு தொடர்புடையது. இதனால் இந்த வழக்கை தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.