ஸ்டால்கள் சேதம்; சிதறி ஓடிய மக்கள்; சிலர் காயம்
தெலங்கானாவின் நிஜாமாபாத்தில், விவசாய மஹோத்ஸவம் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் உத்தம்குமார் , கிருஷ்ணாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோர் ஹைராபாத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலக மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் அங்கு இறங்காமல், நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி மைதானத்தில் நேரடியாக வந்து இறங்கியது. ஹெலிகாப்டர் தரையை தொடும்போது ஏற்பட்ட பலத்த காற்றால் புழுதி பறந்தது. புயல் வீசியதுபோல அந்த இடம் முழுவதையும் புழுதி மறைத்தது. அங்கிருந்தவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர்.
ஏப் 21, 2025