மிசோரோம், மணிப்பூருக்கு புதியவர்கள் நியமனம் the president appointed governors for 5 states
கேரளா, பீகார், ஒடிசா, மாநில கவர்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மணிப்பூர், மிசோராம் மாநிலங்களுக்கு புது கவர்னர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறையின் முன்னாள் செயலர் அஜய்குமார் பல்லா மணிப்பூரின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். காலியாக இருந்த இப்பதவியை சிக்கிம் கவர்னர் லட்சுமணன் பிரசாத் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான், பீகாருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, பீகார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மிசோராம் கவர்னராக இருந்த ஹரி பாபு கம்பம்பதி, ஒடிசா கவர்னராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய்குமார் சிங் மசோராமின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.