ஆதவ் அர்ஜுனாவை நீக்க கடும் நெருக்கடி! | Thirumavalavan | VCK | Aadhav Arjuna | Vijai | TVK
சமீபத்தில் நடந்த அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார். நுாலை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், 200 தொகுதிகளில் வெல்வோம் என்று இறுமாப்புடன் எகத்தாளமாக முழக்கமிடுகின்றனர். சுயநலத்துக்காக திமுக அமைத்துள்ள கூட்டணி கணக்குகளை 2026 சட்டசபை தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவர் என்றார். திமுகவை நேரடியாக தாக்கி இருவரும் பேசியது, அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கொந்தளிக்க செய்தது. திமுகவுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதை திருமாவளவன் கண்டு கொள்ளவில்லை. ஆதவ் பேச்சுக்கும், விசிகவுக்கும் சம்பந்தமில்லை என பூசி மெழுகினார். ஒரு பக்கம் ஆதவுக்கு ஆதரவு, இன்னொரு பக்கம் திமுகவை சமாதானப்படுத்தும் பேச்சு என திருமா டபுள் கேம் ஆடுவதாக திமுகவினர் நினைக்கின்றனர்.