/ தினமலர் டிவி
/ பொது
/ நெல்லை மேயர் வேட்பாளரின் ஆச்சரிய பின்னணி! | Tirunelveli Mayor | DMK | Tirunelveli Mayor Candidate
நெல்லை மேயர் வேட்பாளரின் ஆச்சரிய பின்னணி! | Tirunelveli Mayor | DMK | Tirunelveli Mayor Candidate
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். உட்கட்சி பூசல் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்களன்று நடைபெறும் என மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மேயர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து அமைச்சர்கள் கே என் நேரு, தங்கம் தென்னரசு ஞாயிறன்று நெல்லையில் ஆலோசனை நடத்தினர். 25வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டுவை மேயர் வேட்பாளராக அமைச்சர்கள் அறிவித்தனர். ராமகிருஷ்ணன் வயது 55. நெல்லை டவுனில் வசிக்கிறார்.
ஆக 04, 2024