உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏடிஎம் திருட்டில் ஈடுபட்டது பாஜ நிர்வாகியா? | Tirupur BJP | Tirupur Police | ATM Theft case

ஏடிஎம் திருட்டில் ஈடுபட்டது பாஜ நிர்வாகியா? | Tirupur BJP | Tirupur Police | ATM Theft case

அவர் திமுகவின் ஸ்லீப்பர் செல்! பாஜவின் பரபரப்பு அறிக்கை திருப்பூரில் தனியார் ஏடிஎம் மெசினை கடந்த 20ம் தேதி கல்லால் உடைத்து அதிலிருந்து பணத்தை திருட முயற்சி செய்ததாக புகார் சென்றது. அனுப்பர்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருப்பூர் அவிநாசி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகானந்தம் பாஜவின் திருப்பூர் மாவட்ட பிரச்சார அணி செயலாளராக உள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ அறிக்கை வெளியிட்டுள்ளது. முருகானந்தம் 23ம் தேதியே கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். திமுகவில் இருந்து பாஜவுக்கு வந்தவர் முருகானந்தம்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி