உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 21 மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகும் கன மழை | TN Weather today | heavy rain alert for Tamil Nadu

21 மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகும் கன மழை | TN Weather today | heavy rain alert for Tamil Nadu

கடலில் ஒரே நேரத்தில் 3 சுழற்சி தமிழகத்தை மிரட்டும் கனமழை ராடாரில் எந்தெந்த ஊர்கள்? வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததால், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. அதே நேரம் மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சுழற்சி நிலவுவதால், 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பான வானிலை மைய அறிக்கை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டது. ஆனால் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்னொரு பக்கம் கேரள கடலோரப் பகுதிளை ஒட்டி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 19ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யும்.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ