இவங்கதான் முக்கிய காரணம்; முதல்வருக்கு வீடியோவில் புகார் | LawAndOrder
திருநெல்வேலி நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ, ஜாகீர் உசேன் பிஜிலி. இவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு குழுவில் பணியாற்றியவர். டவுனில் உள்ள முர்த்தின் ஜர்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார். ரமலான் தொழுகை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் வழிமறித்து வெட்டி கொன்றது. தைக்கா அருகே உள்ள 36 சென்ட் நிலம் தொடர்பாக ஜாகீருக்கும், தவ்பீக் உள்ளிட்டோருக்கும் தகராறு இருந்து வந்துள்ள நிலையில், இக்கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தேடப்பட்டவர்களில் பால் கட்டளையை சேர்ந்த கார்த்திக், தொட்டி பாலத்தெருவை சேர்ந்த அக்பர் ஷா ஆகியோர் திருநெல்வேலி கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.