உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே ஆண்டில் 2வது முறையாக கட்டணம் உயர்வு; காரணம் என்ன? Train fare hike| Railways rationalises fares

ஒரே ஆண்டில் 2வது முறையாக கட்டணம் உயர்வு; காரணம் என்ன? Train fare hike| Railways rationalises fares

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் வரும் 26ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. அதன் விவரம் 215 கி.மீ. வரை சாதாரண வகுப்புக்கு கட்டண உயர்வு இல்லை. 215 கிமீக்கு மேல் சாதாரண வகுப்புக்கு 1 கி.மீக்கு 1 பைசா உயர்த்தப்படும். 500 கி.மீ. பயணத்துக்கு ஏசி அல்லாத வகுப்புக்கு கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும். மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு 1 கி.மீக்கு 2 பைசா கட்டணம் உயரும். புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர பாஸ்களுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. டிக்கெட் கட்டணம் உயர்வு மூலம் ரயில்வேக்கு இந்தாண்டு 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நெட்ஒர்க் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பணியாளர் செலவு 1.15 லட்சம் கோடியாகவும், ஓய்வூதிய பொறுப்பு 60,000 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 2024-25 ஆண்டில் ரயில்வே மொத்த செயல்பாட்டு செலவு 2.63 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க, சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும், குறைந்தளவு பயணிகள் கட்டணத்தை முறைப்படுத்தவும் கவனம் செலுத்தி வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2020க்கு பின், கடந்த ஜூலையில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், ஒரே ஆண்டில் 2வது முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. #TrainFareHike #RailwaysRationalisesFares #TransportUpdates #PublicTransport #RailwayNews #FareChanges #CommuterAwareness #BudgetTravel #TrainTravel #TravelTips #RailwaySystem #HikeInFares #PublicTransportSystem #TravelNews #EconomicalTravel

டிச 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை