சிக்கல் வந்தால் அரசியலாக்க தவெக திட்டம் ! | TVK | Vijay | Jana Nayagan
நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இனி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். ஜனநாயகன் அரசியல் பேசும் படமாக இருக்கும். சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவை இப்படம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நடிகர் விஜய் மற்றும் அவருடைய கட்சியினர் அடித்து பேசுகின்றனர். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறியதாவது: இந்த படம் எவ்வித இடையூறும் இல்லாமல் வெளியாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. கடந்த கால நிகழ்வுகளை வைத்தே இந்த சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள், ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஜூன் 01, 2025