தமிழகம் வந்தது தேஜ கூட்டணி உண்மை கண்டறியும் குழு! | TVK | Anand | TVK | TVK Campaign|Karustampede
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி உள்ளனர். சம்பவம் தொடர்பாக தேஜ கூட்டணி சார்பில் உண்மை கண்டறியும் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து உள்ளனர். லோக்சபா எம்பி ஹேமமாலினி தலைமையிலான இந்த குழுவில், பாஜ, தெலுங்கு தேசம், சிவசேனா கட்சி எம்பிக்கள் உள்ளனர். குழுவில் உள்ள அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர் இன்று தமிழகம் வந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களையும் இறந்தவர்களின் குடும்பத்தினரையும் வீடு வீடாக சென்று சந்திக்க உள்ளோம். கரூரில் நடந்த துயரமான விபத்து குறித்து அதிகாரிகள் முதல் அனைவரயும் சந்தித்து விசாரணை செய்து செய்து விரிவான அறிக்கை தயார் செய்யப்படும் என இக்குழுவினர் கூறி உள்ளனர்.