மேல்மருவத்தூர் அருகே பெண் போலீசாருக்கு சோக முடிவு two women police dies road accident மேல்மருவத்தூ
நித்யாவின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம். ஜெயஸ்ரீ திருவொற்றியூரிலும், நித்யா மாதவரத்திலும் வசித்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் இருந்த இருவரும் புல்லட்டில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டனர். நேற்றிரவு சென்னையில் இருந்து புல்லட்டில் புறப்பட்டனர். இன்று அதிகாலை மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது, புல்லட்டின் பின்புறத்தில் வேகமாக வந்த ஒரு கார் மோதியது. 2 பேரும் புல்லட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விரைந்து சென்று நித்யாவை மீட்டு ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நித்யாவும் இறந்தார். காரை ஓட்டி வந்த மதன்குமாரை (24) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.