மோதலை தடுக்காமல் எஸ்கேப் ஆன திமுக எம்எல்ஏ | Bullock cart race | Udhayanidhi birthday | Conflict | Ka
தேனி, கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் திமுகவினர் இந்த பந்தயத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பந்தய முடிவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தபோது, தேவாரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன், போட்டி நடத்துவதில் பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டினார். போட்டியை முறையாக நடத்தவில்லை, முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி எம்எல்ஏ மகாராஜனிடம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்களும், மாட்டு வண்டி பந்தயத்தை ஏற்பாடு செய்தவர்களும் ஹரிஹரனுடன் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் இருதரப்புக்கும் அடிதடியாக மாறியதால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட இரு தரப்பையும் கைது செய்யாமல், எம்எல்ஏவிடம் கேள்வி கேட்ட வழக்கறிஞர் ஹரிஹரனை அவசர அவசரமாக இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.